Right Foot

* உணவு உட்கொள்ள வலதுகரம் பயன்படுகிறது. தானம் தர்மம் வழங்க வலது கை முந்துகிறது. பிறருக்கு உதவ வலது கரத்தை நீட்டுகிறோம். மனைவியை வலது கரத்தால் ஏற்றுக் கொள்கிறோம்.

* சுபநிகழ்ச்சிகளில் மனைவியை வலது பக்கம் நிற்க வைக்கிறோம். கடவுளுக்கு வலது கரத்தால் பணிவிடை செய்கிறோம். வரவேற்பிலும் விடையளிப்பதிலும் வலது கரம் செயல்படுகிறது. இப்படி, செயல்பாடுகளில் இயல்பாகவே வலது கரத்திற்கு முன்னுரிமை தருகிறோம்.

* மூளையின் உத்தரவின் பேரில் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களும் உள்ளனர். அவர்கள் இவர்களுக்கு விதி விலக்கானவர். இடது கையை நாமம் சுத்தம் செய்வதற்காக பயன்படுத்துவதனால், மற்ற காரியங்களில் அதற்கு முன்னுரிமை இல்லை.

* ‘நல்ல காரியங்களில் முதல் அடி எடுத்து வைப்பது வலதுகாலாக இருக்க வேண்டும்!’ என்று சாஸ்திரம் கூறுகிறது. பல நல்ல காரியங்களுக்கு வலதுகையைப் பயன்படுத்திய அனுபவம் நமக்கு இருப்பதால், வலது காலை எடுத்து உபயோகிப்பது சாலச் சிறந்தது என்று நம் மனம் நம்பி விடுகிறது.

* உடலின் இரு கூறுகளில் இடது கூறைவிட, வலது கூறு பலம் பொருந்தியது என்று வேதம் கூறும். பக்கவாதம் தாக்கும்போது உடலின் வலது பக்கம் வீழ்ந்தால், பலமான பகுதி வீழ்ந்ததாக ஆயுர்வேதம் கூறும்.

* எனவே, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்வுகளில், முதலில் நுழைய வேண்டியது காலாக இருப்பதால், ‘வலதுகாலை எடுத்து வைத்து நுழைய வேண்டும்” என்று கூறுகிறது தர்மசாஸ்திரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here