யாஷிகாவே காதலிப்பதாக வெளியான வதந்திக்கு ரிச்சர்ட் ரிஷி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறார்‌.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே யாஷிகா மற்றும் ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி இருவரும் காதலிப்பதாக சில வதந்திகள் வேகமாக பரவி வந்தது.

இது குறித்து யாஷிகாவின் அம்மாவும் சமீபத்தில் அதற்கான விளக்கத்தை அளித்து மறுப்பு தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரிச்சர்ட் ரிஷி அவர்களும் மறுப்பு கூறி விளக்கம் அளித்துள்ளார் அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை அப்புகைப்படங்கள் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புகைப்படங்கள் என கூறியிருக்கிறார். இதனால் இவர்களது இந்த காதல் வதந்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.