Reshma Releave From Anbe Vaa Serial

பிரபல சீரியலில் இருந்து நடிகை ரேஷ்மா விலகிக் கொண்ட நிலையில் அவருக்கு பதிலாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரசாந்த் பட ஹீரோயின்.

Reshma Releave From Anbe Vaa Serial : தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றார்.

அண்ணா தொழிற்சங்கத் தேர்தல் : அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது பேய்மாமா, போடா முண்டம், பர்பெக்ட் ஹஸ்பண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Ponniyin Selvan படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் விவரம்! – முழு லிஸ்ட் | Manirathnam

அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அன்பே வா சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலஷ்மி சீரியலில் ஜெனிஃபர் விலகிக் கொண்டதால் அவருக்கு பதிலாக என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். விஜய் டிவி சீரியல் வாய்ப்பு வந்ததும் சன் டிவி சீரியலில் இருந்து ரேஷ்மா விலகிக் கொண்டுள்ளார். ‌‌ அவருக்கு பதிலாக பிரபல நடிகை பிரசாந்த்தின் வண்ண வண்ண பூக்கள் படத்தில் நாயகியாக நடித்த வினோதினி இந்த சீரியலில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.