செய்வினை, Seivinai

Seivinai : 

*தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போக செய்ய வேண்டி செய்யப்படும் மாந்திரீக முறையே செய்வினை எனப்படுகிறது. மிகவும் கொடுமையான மாந்திரீக முறைகளில் இதுவும் ஒன்று. பில்லி, ஏவல், சூனியம், வசியம் என பல தோஷங்கள் நீங்க சிறந்த வழி இறைவழிபாடு செய்வது ஆகும்.

#செய்வினை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?

1.துளசி:

*ஒரு மண்பானையில் துளசி இலைகளை போட்டு வைத்துப் பாருங்கள். தீய சக்திகள்வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப்போய்விடும், இல்லை என்றால் அவை வாடாது.

2.எலுமிச்சை :

*எலுமிச்சை மாலையை கோர்த்து துர்க்காதேவிக்கு மாலையாக போடவேண்டும். பின்னர் அதிலிருந்து ஒரு எலுமிச்சையை பெற்று வந்து வீட்டில் ஒரு இடத்தில் வையுங்கள். ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை நன்றாக காய்ந்துஇருந்தால், உங்கள் வீட்டில் தீய சக்தி இல்லை என்று அர்த்தம்.ஆனால் அந்த எலுமிச்சைப்பழம் அழுகிப்போய் இருந்தால் தீய சக்தி உள்ளது.

பரிகாரம் :

1. வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஒருமண்விளக்கில் வேப்பெண்ணெயில் தீபம் ஏற்றவேண்டும். ஏற்றிய பிறகு எல்லா ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூட வேண்டும். ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிகிறதா எனப் பாருங்கள்.

ஒரு வாரம் கழித்து நல்லெண்ணை மற்றும் வேப்பெண்ணெய் சமமாக எடுத்து தீபமேற்ற வேண்டும். பூஜை அறையில் ஏற்றினால் நல்லது. மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்யுங்கள்.

2. வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறையில் உயரத்தில் வைக்க பில்லி சூனியம் செய்வினை தோஷங்கள் விலகி ஓடிவிடும்.

3. சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷம் நீங்கும்.

4. ஆலயத்தில் உள்ள திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழத்தை சொருகினால், திருஷ்டி ,செய்வினை தோஷங்கள் நீங்கும்.

5.ருத்ராட்சம், சாலகிராமம், துளசி, வில்வம் உள்ள இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு செய்வினை அணுகாது.

6. ஸ்ரீநரசிம்மரின் எந்த கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லை, பில்லி, சூனியம், திருமணத்தடை, வசியம், செய்வினை ஆகியவை விலகி நன்மை
அடையலாம்.

யாருக்கெல்லாம் செய்வினை செய்ய முடியாது :

நல்ல நேர்மறை மற்றும் திட மனது இருப்பவர்களிடம் செய்வினை பலிக்காது. வீட்டில் துளசி செடி இருந்தால் அந்த செய்வினை, வைத்தவரை நோக்கித் திரும்பி விடும். தினமும் காயத்ரி மந்திரம் படிப்பவர்களிடம் செய்வினை நெருங்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here