Releave Steps For One Side Head Ache
Releave Steps For One Side Head Ache

Releave Steps For One Side Head Ache :

ஒற்றை தலைவலி என்பது உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும் தன்மையுடையதாகும்.

தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற நரம்பியல் தொடர்பான ஒரு நோய் குறியாகும். இந்த ஒற்றை தலை வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் தாக்கும்.

தலைவலிக்கான காரணங்கள்:

▪ உறக்கமின்மை ,
▪ முறையற்ற உணவு பழக்கம்,
▪ காது, மூக்கு, தொண்டை, பல் முதலியவற்றில் ஏற்படும் தொற்று,
▪ தலையில் ஏதாவது அடிபட்ட காயம் ,
▪ மது மற்றும் போதை மருந்துகள்,
▪ மருந்துகளின் ஒவ்வாமை, ▪பெண்களின் மாதவிடாய் பிரச்சனை, ▪ கருத்தடை மாத்திரைகளைஅதிகமாக உபயோகித்தல்,
▪ சர்க்கரை சக்தி குறைவது, ▪மலச்சிக்கல், மன உளைச்சல் கண் குறைபாடு
போன்ற சில காரணங்களாலும் தலைவலி ஏற்படுகிறது.

தீர்வுகள் :
1. ஒரு துணியில் குளிர்ந்த நீரை நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்ட வேண்டும். பின்பு கைகளையும் கால்களையும் வெந்நீரில் வைக்க வேண்டும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

2. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

3. அரை தேக்கரண்டி கடுகு பொடியை, மூன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்தக் கரைசலை மூக்கில் விட ஒற்றைத் தலைவலி தீரும்.

4. கோஸ் இலைகளை நன்கு நசுக்கி, ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

5. பூண்டையும், மிளகையும் தட்டிப் போட்டு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி குளிர செய்து தலையில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6. வைட்டமின் சத்து அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், தக்காளி ஈரல், பருப்பு வகைகள், மீன் போன்றவற்றையும் உண்ண வேண்டும்.

7. 200 மில்லி பசலைக்கீரை சாறு மற்றும் 300 மில்லி கேரட் சாறு, 100 மில்லி பீட்ரூட் சாறு மற்றும் 100 மில்லி வெள்ளரிச் சாறு ஆகியவைகளை சம அளவு எடுத்து தினமும் பருக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here