Release Plan About Valimai Movie

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Release Plan About Valimai Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

கார்த்திகேயா வில்லனாக நடிக்க ஹூமா குரோஷி நாயகியாக நடித்து வருகிறார். இன்னும் பல நடிகர், நடிகைகள் இப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த பிறகு வெளியாகும் எனவும் இந்த படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் எனவும் தகவல் கசிந்து இருந்தது.

இந்த தகவல்களை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் படக்குழு இத்திரைப்படத்தை சுதந்திர தின விழா அன்று சோலோ ரிலீசாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் செம ஹாப்பியாகி உள்ளனர்.