வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Release Details of Vendhu Thaninthathu Kaadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சிம்பு ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. வெந்து தணிந்தது காடு படம் எப்போது ரிலீஸ் தெரியுமா??

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நேபாள நடிகை நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Pavani & Amir இப்படிதான்! – Bigg Boss குறித்து ரகசியம் சொன்ன Title Winner ராஜு | HD

சிம்பு ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. வெந்து தணிந்தது காடு படம் எப்போது ரிலீஸ் தெரியுமா??
இந்திய அணியின் ஆட்டம் சரியில்லை : கோச்சர் டிராவிட் ஒப்புதல்

அதாவது இந்த மாத இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடித்து விட்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பீஸ்ட், கேஜிஎப் 2, RRR என பல திரைப்படங்கள் ஏப்ரல் மாதத்தை குறி வைத்துள்ள நிலையில் இந்தப் படமும் ஏப்ரல் ரிலீஸ் என தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.