பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள வலிமை படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Release Date Update on Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படத்தில் பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.

திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் கசிந்துள்ளது.

அற்புதமான ஒரு காமெடியன் BALA – Anti Indian Producer Aadham Bava Speech

அதாவது பொங்கல் விருந்தாக இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.