சத்தமில்லாமல் தளபதி 65 படத்தின் அப்டேட் மற்றும் ரிலீஸ் தேதி ஆகியவை இணையத்தில் வெளியாகி உள்ளன.

Release Date of Thalapathy65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

சத்தமில்லாமல் வெளியான தளபதி 65 படத்தின் அப்டேட் மற்றும் ரிலீஸ் தேதி

இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் வெளிநாட்டில் முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஜூலையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனியில் உள்ள ஸ்டூடியோவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய டீமுடன் இரண்டு வாரங்கள் இந்த செட்டில் படப்பிடிப்புகள் நடத்தப்பட உள்ளது.

வெற்றி பெறும் கிரிக்கெட் அணிக்கு, ரூ.11¾ கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவுக்குமான நடன காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தில் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு அடுத்த வருட தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Simbu தொகுத்து வழங்கும் International Show – மரண Waiting-ல் ரசிகர்கள் | Latest News | Tamil | Viral