நட்டி நடிப்பில் குருமூர்த்தி சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவன் திரைப்படம் டிசம்பர் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமைகளுடன் வலம் வருபவர் நட்டி நட்ராஜ். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நட்டி நடிப்பில் குருமூர்த்தி சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவன்.. டிசம்பர் 9-ல் ரிலீஸ்.!!

அந்த வகையில் இவரது நடிப்பில் அடுத்ததாக குருமூர்த்தி சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவன் என்ற திரைப்படம் வரும் டிசம்பர் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது.

கே பி தனசேகர் அவர்களின் கதை திரைக்கதை இயக்கத்தில் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய சத்தியதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் நட்டிக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ராம்கி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நட்டி நடிப்பில் குருமூர்த்தி சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவன்.. டிசம்பர் 9-ல் ரிலீஸ்.!!

இந்த படத்தின் டீசர் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் படம் டிசம்பர் ஒன்பதாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் ஜெகதா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நட்டி நடிப்பில் குருமூர்த்தி சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவன்.. டிசம்பர் 9-ல் ரிலீஸ்.!!