அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Release Date of Annathae : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்க இமான் இசையமைத்து வருகிறார்.

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அண்ணாத்த ரிலீஸ் தேதி அறிவித்த சன் பிக்சர்ஸ்

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து டப்பிங் பணிகளும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் இந்தத் திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதாவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்பதையும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அண்ணாத்த ரிலீஸ் தேதி அறிவித்த சன் பிக்சர்ஸ்