வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Release Date Details of Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் இந்த வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி.!

ஒன்றரை வருட காத்திருப்புக்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியது. ‌‌ இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படம் அண்ணாத்த படத்தின் ரிலீசுக்கு முன்னதாக வெளியாகும் என கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ஆயுதபூஜை ஸ்பெஷலாக அக்டோபர் 13ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தீபாவளி தினத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தை சோலோவாக வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதன் காரணமாக வலிமை படக்குழு இந்த தேதியை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக அஜித்தின் விசுவாசம் மற்றும் ரஜினியின் பேட்டை ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. தமிழக வசூலைப் பொறுத்தவரை விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றியையும் உலகளாவிய வசூலில் பேட்ட அதிக வசூலைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னைக்குத்தான் உருப்படியான காரியம் பண்ணிருக்க – Madhurai Muthu-வின் அட்டகாசமான Shopping

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.