அஜித் 61 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த மிரட்டலான தகவல் வெளியாகியுள்ளது.

Release Date Details of Ajith61 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இந்த திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தையும் வினோத் இயக்க போனி கபூர் தான் தயாரிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வரும் 2022 தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 2022 தீபாவளி தல தீபாவளி ஆக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.