அந்த நடிகர் செத்தா பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என பிரபல நடிகரை எடுத்து வாங்கி உள்ளார் நடிகை ரேகா நாயர்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரேகா நாயர். படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் இவர் பார்த்திபன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருப்பார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பல பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவர் பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயில்வான் ரங்கநாதன் நரகாசுரனுக்கு சமமானவர். நரகாசுரன் கொல்லப்பட்ட தினம் தான் தீபாவளி, அதேபோல் எனக்கு பயில்வான் ரங்கநாதன் இறக்கும் தினம் தான் தீபாவளி. அவர் செத்துப் போனால் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன் என தெரிவித்துள்ளார்.

இவர் இரவில் நிழல் படத்தில் நிர்வாணமான காட்சிகள் நடித்து இருந்ததை பயில்வான் ரங்கநாதன் மோசமாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.