Rekha in Chithi 2

சித்தி 2 சீரியல் ராதிகாவுக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rekha in Chithi 2 : தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சித்தி 2. இந்த சீரியலில் சாரதா என்ற முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் ராதிகா சரத்குமார்.

சமீபத்தில் ராதிகா சரத்குமார் சீரியலில் இருந்து விலகுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது சித்தி 2 சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சீரியல் தொடருமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது சாரதா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பிக் பாஸ் பிரபலம் ரேகா நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.