பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பதை பேட்டியில் கூறியுள்ளார் பிரபல நடிகர்.

Reddin Kingsly About Beast Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, இயக்குனர் செல்வராகவன் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் படத்தில் காமெடியனாக நடித்து உள்ள ரெடின் கிங்ஸ்லி அளித்த பேட்டி ஒன்றில் இந்த படம் கண்டிப்பாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.