
Red Movie : தல அஜித்தின் ரெட் படம் தோல்வி தான் எனவும் அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் அப்படத்தின் இயக்குனர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். இவரது நடிப்பில் இதுவரை 57 படங்கள் வெளியாகியுள்ளது.
தல 58 படமாக சிறுத்தை சிவா இயக்கியுள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த 58 படங்களில் காமெடி நடிகரான சிங்கம் புலி இயக்கிய ரெட் படமும் ஒன்று. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஆனாலும் மதுரை போன்ற பகுதியில் அஜித்திற்காக மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது.
தற்போது இப்படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பது பற்றி நடிகர் சிங்கம் புலி கூறியுள்ளார்.
அதாவது முதலில் ரெட் படத்தை காதல் படமாக தான் எடுக்க இருந்தேன், அதில் ஆக்ஷன்களையும் சேர்ந்தேன்.
ஆனால் ஹுமர் மிஸ்ஸாகி விட்டது, அதான் என்னுடைய இப்படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என கூறியுள்ளார்.