Red Eyes - Reasons for Bloodshot
Red Eyes - Reasons for Bloodshot

Red Eyes – Reasons for Bloodshot :

உங்கள் கண்கள் அடிக்கடி சிவந்து போகின்றதா? காரணம் தெரியுமா, உங்களுக்கு?

கண்கள் அடிக்கடி சிவந்து போக காரணங்கள்:

# நமது கண்களில் ஏற்படும் அலர்ஜிக்கு எதிராக செயல்படும் ஆன்ட்டி ஹிஸ்டமின் மற்றும் தூக்க மாத்திரைகளை, நாம் சாப்பிட்டால் கண்கள் வறண்டு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் கண்களை சுற்றியுள்ள திசுக்களில் ரத்த ஓட்டம் குறைந்து கண்கள் சிவப்பு நிறமாக மாறுகிறது.

# கண்கள் சிவப்பு நிறத்தை தடுக்க நாம் பயன்படுத்தும் சொட்டு மருந்தை,
நமது கண்கள் பழகிக் கொள்வதால் மருந்தை நிறுத்தும் பொழுது, கண் மீண்டும் சிவப்பு நிறத்தை அடைகிறது.

# அதிகமாக மது அருந்தும் போது கண்களை சுற்றியுள்ள மிக நுண்ணிய ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகரித்து, கண்கள் சிவந்து போகின்றன.

# அடிக்கடி சிகரெட் புகைப்பது கூட நமது கண்களை சுற்றியுள்ள நரம்புகளை இறுக்கமடையச் செய்து கண்கள் சிவந்து போக செய்கின்றது.

# நீச்சல் குளத்தில் கலக்கப்படும் குளோரின், கண்களின் செயல்படும் நல்ல பாக்டீரியாக்களை அழித்து கண்கள் சிவக்க காரணமாகின்றன.

# வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் கண்கள் சிவந்து போகின்றது.

# நாம் கண்களை அழுத்தும்போது அல்லது தவறான முறையில் தூங்கும் போதும் ரத்த அழுத்தம் திடீரென கண்களில் அதிகமாகி சிவந்து போகும் வாய்ப்புகள் ஏற்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here