Red Alert for Nilgiri and Covai :
Red Alert for Nilgiri and Covai :

Red Alert for Nilgiri and Covai : தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 9ம் தேதியான இன்று பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

தேனி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் உள் தமிழகத்தில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டி உள்ள தென்மேற்கு அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதையொட்டி உள்ள வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள், லட்சத் தீவு பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ முதல் 50 கி.மீ வரை பலத்த காற்று வீசும்.

எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 9ம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.