இந்தியில் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது அசுரன் திரைப்படம்.

Records of Asuran Hindi Remake : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கி இருந்த இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தியில் பெரும் சாதனைகளைப் படைத்த அசுரன் - தெறிக்கவிட்ட கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்.!!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியான இந்தப் படம் இந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூபில் பதிவேற்றப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான இந்த திரைப்படம் யூட்யூபில் தற்போது 3 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழ் ரசிகர்களைப் போலவே வட இந்திய ரசிகர்களை தனுஷின் அசுரன் திரைப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அசுரன் படம் படைத்த சாதனையால் கர்ணன் திரைப்படமும் இந்தியில் டப் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.