துணிவு பட போஸ்டர் அஜித் ரசிகர்களால் பெரும் சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைக்க படு விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் உட்பட பல்வேறு நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகர் சமுத்திரகனியும் இப்படத்தில் நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

துணிவு பட போஸ்டர் படைத்த சாதனை.. விஜய் ரசிகர்களையும் திணற வைத்த தல வெறியன்ஸ் - அப்படி என்ன விஷயம்??

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் மாலை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து செகண்ட் லுக் நேற்று மதியம் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படைத்துள்ள சாதனை விஜய் ரசிகர்களையும் திணற வைத்துள்ளது.

துணிவு பட போஸ்டர் படைத்த சாதனை.. விஜய் ரசிகர்களையும் திணற வைத்த தல வெறியன்ஸ் - அப்படி என்ன விஷயம்??

அதாவது துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுவரை எந்த ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் செய்யாத சாதனையை செய்துள்ளது. ஆமாம், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு மில்லியன் கமெண்டுகளை பெற்றுள்ளது. அஜித் ரசிகர்களின் இந்த வெறித்தனமான செயலை விஜய் ரசிகர்கள் எப்படி முறியடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது.