தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் மணிகண்டன் சில சாதனைகளை படைத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெறுவது வழக்கம்.

இப்படி நடந்து வரும் நாமினேஷனில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இடம்பெற்றுள்ளார் மணிகண்டன். இப்படி மிக குறைந்த அளவில் நாமினேஷனில் இடம்பெற்ற போட்டியாளர்களின் மணிகண்டனுக்கு தான் முதலிடம்.

அது மட்டுமல்லாமல் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் அதிக முறை பிக் பாஸ் வீட்டின் தலைவராக பதவி வகித்திருப்பவதும் மணிகண்டன் தான் என தெரியவந்துள்ளது. இவர் அவள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.