நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யா உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற சிறு கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சூர்யா 42 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாரான சூர்யா!!… வெளியான ரீசன்ட் கிளிக்ஸ் வைரல்.!

இந்த படங்களை தொடர்ந்து சூர்யா அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். வரலாற்றுக் கதையில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா 42 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாரான சூர்யா!!… வெளியான ரீசன்ட் கிளிக்ஸ் வைரல்.!

இப்படியான நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார். அதற்காக பிட்னஸ் பயிற்சி எடுத்து வரும் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அது தற்போது ரசிகர்களின் இடையே பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.