மாலத்தீவின் கணவருடன் ஹனிமூன் கொண்டாடி வருகிறார் பிகில் பட நடிகை.

Reba Monica John in Honeymoon Photos : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் பிகில். அட்லி இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் எக்கச்சக்கமான நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர்.

அதில் விளையாட்டு வீரர்களில் ஒருவராக நடித்து இருந்தவர்தான் ரெபா மோனிகா ஜான். இந்த படத்தை தொடர்ந்து இவர் அஸ்வினுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடனமாடினார். மேலும் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எஃப்ஐஆர் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இவருக்கும் இவருடைய நீண்டநாள் காதலருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது இருவரும் மாலத்தீவு சென்று ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். அங்கு கணவருடன் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரெபா மோனிகா ஜான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.