Reasons for Thodari Movie Failure

தொடரி படத்தின் தோல்விக்குக் காரணம் என்ன என பிரபு சாலமன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Reasons for Thodari Movie Failure : தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து இயக்குனராக வலம் வருபவர் பிரபு சாலமன். இவரது இயக்கத்தில் இன்று காடன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான தொடரி திரைப்படம் தோல்வியை தழுவியது. அதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

தொடரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஸ்டூடியோ ஒன்றில் தான் டிரெயினை வைத்து படமாக்கினோன். இது போன்ற படத்திற்கு VFX மற்றும் RND டீமும் தேவை, அவற்றை எல்லாம் இந்த படத்தில் பயன்படுத்தாததே படத்தின் தோல்விக்கு காரணம் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.