பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஆரியன் விலக காரணம் என்ன என தெரியவந்துள்ளது.
Reason for Aryan Quit From Baakiyalakshmi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி மற்றும் பாக்யாவில் மூத்த மகனாக நடித்து வருபவர் ஆர்யன். இது சீரியல் மூலம் இவருக்கு நல்ல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது. இவருக்கு இவருக்கு ஜோடியாக நடித்துவரும் ஜெனிக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆரியன் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். இதனையடுத்து நேற்று முதல் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் நடித்து வருகிறார்.
இப்படியான நிலையில் தற்போது ஆர்யன் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ள என்ன காரணம் என தெரியவந்துள்ளது. இவர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ள கனா காணும் காலங்கள் சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாகவே அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிக் கொண்டாராம். விரைவில் கனா காணும் காலங்கள் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.