வலிமை படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளி போக காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Reason Behind Valimai Release on Pongal : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உள்ள திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முக்தி நிலை அருளும், தென்திசை கயிலாயம்.!

வலிமை படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளி போக இது தான் காரணமா?? வெளியான ஷாக் தகவல்

இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று வெளியான அறிவிப்பின்படி வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நான் அதை பத்தி Future ல் பேசுகிறேன்! – Silambarasan TR Latest Press Meet | Apollo Hospital

படக்குனு தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டு வந்த நிலையில் பொங்கலுக்கு தள்ளி போக காரணம் என்ன என தெரியவந்துள்ளது. அதாவது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. சிஜி வேலைகளைக் கவனிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் படத்தினை சென்சார் செய்ய 50 நாட்களுக்கு முன்பாகவே தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதற்கெல்லாம் போதுமான கால அவகாசம் இல்லாத காரணத்தினால் தான் இந்த படத்தை பொங்கலுக்கு தள்ளி வைத்துள்ளனர். மேலும் பொங்கல் தினத்தில் ஒரே நாளில் வலிமை மற்றும் பீஸ்ட் படங்கள் ரிலீஸ் ஆகாது எனவும் கூறப்படுகிறது. இரண்டு படங்களும் தனித்தனி நாளில்தான் வெளியாகும். இதனால் இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.