சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற காரணம்

சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற காரணம் ஓட்டிங் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற காரணம் : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரேகா மற்றும் வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டு இருந்த நிலையில் இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறினார்.

நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இளைஞர்களுக்கு போட்டியாக விறுவிறுப்பாக ஆட்டத்தை ஆடி வந்த சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். இது நியாயமில்லை எங்களது ஓட்டுக்கு மரியாதை இல்லை என பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற காரணம் ஓட்டிங் அல்ல..  கமல் கொடுத்த Hint, உண்மையை உடைத்த சுரேஷ்.!!

ஆனால் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி நான் தான் வெளியிடப் போகிறோம் என்பதை முன்கூட்டியே அறிந்தது போல நடந்துகொண்டார். விடுவிடுவென ஓடி தன் பொருட்களை மூட்டை கட்டினார்.

மேலும் சனம் மற்றும் கேபியிடம் நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஒரு காரணம் இருக்கு. அது உங்களுக்கு விரைவில் தெரியவரும் என கூறியுள்ளார். இதனால் சுரேஷ் சக்ரவர்த்தி தன்னைப் வெளியேற்றுமாறு கோரிக்கை வைத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இது குறித்து ஒரு ஹின்ட் கொடுத்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் சுரேஷ் சக்ரவர்த்தி இப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம் என குழம்பிப் போயுள்ளார். விரைவில் அந்த காரணம் அனைவருக்கும் தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.