Reason Behind SPB Death
Reason Behind SPB Death

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட SPB அவர்கள் அதிலிருந்து மீண்ட பின்னர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Reason Behind SPB Death : இந்திய திரையுலகில் மிகப்பெரிய பின்னணி பாடகராக கோலோச்சியவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இதுவரை மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

நான்கு மொழிகளில் சிறந்த பாடகருக்கான தேசிய விருதைப் பெற்ற ஒரே பாடகராக எஸ்பிபி வலம் வந்தார். பாடகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் குணச்சித்திர நடிகராகவும் படங்களில் தலை காட்டியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த வாரம் ஒரு நாளில் இருந்து மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனால் அவருக்காக பிரார்த்தனை செய்த ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் திடீரென நேற்று மீண்டும் கவலைக்கிடமான இவரது உடல்நிலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து இன்று மதியம் ஒரு மணி அளவில் உயிர் பிரிந்தது.

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு செய்து 117 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்!(Opens in a new browser tab)

கொரோனாவில் இருந்து மீண்ட எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களில் நுரையீரல் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்ததால்தான் அவர் இவ்வளவு நாளாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

திடீரென மீண்டும் அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாகி மருந்துகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து இறுதியில் அவரது உயிர் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து உள்ளது.

இவருடைய மறைவால் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கும் அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இசைத்துறைக்கே இன்று கருப்பு நாள் என்று கூறினால் அது மிகையாகாது.