Reason Behind Nayanthara Break-up With Prabhu Deva
Reason Behind Nayanthara Break-up With Prabhu Deva

நயன்தாரா பிரபுதேவாவை பிரிய காரணம் என்ன என்பது பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Reason Behind Nayanthara Break-up With Prabhu Deva : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிகர் சிம்புவுடன் வல்லவன் படத்தில் இணைந்து நடித்தபோது அவருடன் காதல் மலர்ந்தது.

அதன்பின்னர் சில வருடம் தொடர்ந்த இவர்களின் காதல் முடிவை சந்தித்தது. காதல் முறிவுக்குப் பின்னர் விஜய்யுடன் இணைந்து வில்லு படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான பிரபுதேவாவுடன் காதல் மலர்ந்தது.

பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் நயன்தாரா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

யாருமே எதிர்பார்க்காத விஷயம்.. தளபதி 65 படத்தில் நாயகி இவர் தானா? – வெளியான ஷாக்கிங் அப்டேட்

ஆனால் திருமணம் நடைபெற வேண்டிய நேரத்தில் பிரபுதேவாவிடம் இருந்து காதலை முறித்துக் கொண்டு வெளியேறினார்.

இதற்கான காரணம் சிம்புவுடனான காதல் பற்றி கேள்வி தான் என கூறப்படுகிறது. காதலிக்கும் போது சிம்புவைப் பற்றி எதையும் கேட்காத பிரபுதேவா திருமணம் செய்து கொண்டிருந்த நேரத்தில் அவருடன் நடந்தது என்ன என கேட்டு நயன்தாராவை நோக வைத்துள்ளார்.

இதனால்தான் நயன்தாரா பிரபுதேவாவை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

பிரபுதேவாவின் காதல் முறிவுக்கு பிறகு நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் மலர்ந்தது.

அந்த காதல் தற்போது வரை நீடித்து வருகிறது, விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.