Reason Behind Me Vijay Trend : Thalapathy 63, Vijay, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Mersal, Sarkar

Reason Behind Me Vijay Trend :

நேசமணியின் அலை கொஞ்சம் கொஞ்சமாக ஓயத்தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் தற்போது மீ விஜய் எனும் ஹேஷ்டேக் இந்திய அளவில் விஜய் ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இணையத்தில் தமிழ் ரசிகர்களின் ஆதிக்கம் இந்திய அளவில் மிகவும் வலுவானது. இது சில வாரங்களுக்கு முன்பு நேசமணி வாயிலாக உலகிற்கே உணர்த்தப்பட்டது.

ஒரு சின்ன பதிலில் தொடங்கிய Pray For Nesamani எனும் ஹேஷ்டேக், மோடியின் பதவியேற்பு விழாவையும் ஓரங்கட்டும் அளவு உலகளவில் டிரெண்டாகி எல்லோரையும் வியக்க வைத்தது.

இன்றைய போட்டி : இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை!

நேசமணியின் அலை கொஞ்சம் கொஞ்சமாக ஓயத்தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் தற்போது மீ விஜய் எனும் ஹேஷ்டேக் இந்திய அளவில் விஜய் ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு குடும்பத்தில் யார் யார் எந்த நடிகரின் ரசிகர்கள் என்பதை பதிவு செய்வதுதான் இந்த ஹேஷ்டேக்கின் நோக்கம். அதாவது என் தாத்தா எம்.ஜி.ஆரின் ரசிகர், என் தந்தை ரஜினியின் ரசிகர், நான் விஜய்யின் ரசிகர் என்பதை சொல்வதுதான் இந்த மீ விஜய் ஹேஷ்டேக்.

ஆரம்பத்தில் சென்னை அளவில் மட்டுமே இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது. பின்னர் இணையத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் ஒருவர் ஒருவராக இதில் சேர்ந்துகொள்ள பின்னர் இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம்பெற்று அசத்தியது.

ஒருகட்டத்தில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவனின் விலகலுக்கு இணையாக இந்த ஹேஷ் டேக் டிரெண்ட் ஆகி பிரமிப்பையும் ஏற்படுத்தியது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.