வலிமையுடன் மோதாமல் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பின் வாங்கியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. ‌‌‌‌‌

Reason Behind Etharkum Thuninthavan Release Planing : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி உள்ளது.

இராமாயணமும் அக்னி தீர்த்தமும்.!

உலகம் முழுவதும் வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துடன் தளபதி விஜயின் டீஸ்ட் திரைப்படம் போதும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அது கோடை விடுமுறைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படமாவது வலிமையுடன் போதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான பின்னணி என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ரிலீஸ் உரிமை தற்போது கோபுரம் பைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அன்புச்செழியனிடம் உள்ளது. இதனை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

படம் தியேட்டரில் வந்த தான் Value-ஆ இருக்கும் – Actress Nikki Galrani Speech | Rajavamsam Press Meet

ஒருவேளை வலிமை படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு கிடைத்து விட்டால் வலிமை மற்றும் எதற்கும் துணிந்தவன் என இரண்டு திரைப்படமும் அவர்களது வெளியீட்டு படங்களாக இருக்கும். இந்த இரண்டு படங்களையும் ஒரே நாளில் வெளியிட்டால் வசூல் பாதிக்கும் என்ற காரணத்தினால் முன்கூட்டியே திட்டமிட்டு எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 4 என அறிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஆர்டிகல் 15 படத்தின் ரீமேக்கில் நடித்து வருவதால் வலிமை படத்தின் உரிமை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.