அஜித் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு வந்ததற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
Reason Behind Ajith‘s Hospital Visit : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.
மரண மாஸாக ரெடியானது வலிமை ஃபர்ஸ்ட் லுக்.. எப்போது ரிலீஸ் தெரியுமா? – வெளியான அசத்தலான அப்டேட்!
எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்தன.
படத்தை தீபாவளிக்கு வெளியிடும் திட்டத்தோடு வேலைகள் நடந்து வந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் படத்தின் வேலைகள் அப்படியே நிற்க வைக்கப்பட்டன.
இதனால் தல அஜித் தன் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அஜீத்தும் ஷாலினியும் மருத்துவமனைக்கு சென்று இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த நேரத்தில் அஜித் மருத்துவமனைக்கு செல்வதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது.
கிளப்பி விட்ட நெட்டிசன்கள்.. விஜய்யிடம் நலம் விசாரித்தாரா அஜித்? – வெளியான உண்மை.!
இப்படியான நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் அஜித்தின் உடம்பில் ஏகப்பட்ட ஆப்பரேஷன்கள் நடந்திருப்பதால் அவர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை உடல் நிலையை பரிசோதித்து கொள்வது வழக்கம்.
அதன் காரணமாகவே தற்போதும் அவர் மருத்துவமனைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் நலமுடன் தான் இருக்கிறார் எனவும் தெரிய வந்துள்ளது.
#ThalaAjith & #Shalini ma'am !
Kudos to Backround Voice Fan Girl Moment !#Valimai pic.twitter.com/3CZKf44QLu
— TempleCityAjithFans-Madurai (@TCAFMDU) May 22, 2020
Latest pics of #Thala #Ajith 😎 #Valimai pic.twitter.com/FGO6IQzc72
— TRENDS AJITH | ᴡᴇᴀʀ ᴍᴀꜱᴋ – ꜱᴛᴀʏ ꜱᴀꜰᴇ (@TrendsAjith) May 22, 2020
https://twitter.com/ThalaAjith_Page/status/1263765345577259010?s=19