தல அஜித் குமார் அவர்கள் இனி தன்னை தல என்ற பட்டப் பெயரோடு அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டதற்கு பின்னாடி இருக்கும் காரணம் தெரிய வந்துள்ளது.

Reason Behind Ajith Request on Thala Name : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். உலகம் முழுவதும் இவருக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ரசிகர்கள் இவரை அன்போடு தல என அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அஜித் குமார் அவர்கள் இனி தன்னை ரசிகர்களோ மீடியா நண்பர்களை தல என்ற பட்டப் பெயரை வைத்து அழைக்க வேண்டாம். அதற்கு மாறாக அஜித் அல்லது அஜித்குமார் அல்லது ஏகே என அழைக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.

டோனிக்கு ரூ.12 கோடி, ஜடேஜாவுக்கு ரூ.16 கோடி சம்பளமா? இதென்ன விளையாட்டு..

இந்த நிலையில் தற்போது இதற்கான முடிவிற்கு காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. சமீபகாலமாகவே இந்தப் பட்டப் பெயர் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன. இதன் காரணமாக சில சமயங்களில் சிலரது மனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டே அஜித் அவர்கள் ஆறு மாத காலமாக இந்த அறிக்கை வெளியீடு குறித்து ஆலோசனை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

எனக்கு சோறு அவந்தாயா போடுறான் – Erode Mahesh Bold Speech | Kanmani Movie Audio Launch

மேலும் மீடியோ நிறுவனங்களுக்கு தனித்தனியாக அறிக்கை வெளியிடலாமா அல்லது ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் சேர்த்து ஒரு அறிக்கையில் சொல்லலாமா? இதனை ரசிகர்கள் எந்த மாதிரி எடுத்துக் கொள்வார்கள் என்ற ஆலோசனைக்கு பிறகு அவர் இந்த அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.