தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தல அஜித் பறித்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

Reason Behind Ajith Reaction in Election Booth : தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திரையுலகப் பிரபலங்களும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலையிலேயே தன்னுடைய மனைவி ஷாலினியுடன் ஓட்டளிக்க சென்ற தல அஜித்துடன் ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்க முயற்சி செய்தார். இதனால் கடுப்பான அஜித் அந்த ரசிகரின் செல்போனை பறித்துக் கொண்டார். இந்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவியது.

செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை அஜித் பிடுங்க இதுதான் காரணம் - பின்னர் நடந்தது என்ன தெரியுமா??

அதன் பின்னர் நடந்தது என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. கொரானா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் மாஸ்க் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அஜித்துடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் மாஸ்க் இல்லாமல் தான் இருந்தார்‌.

இதன் காரணமாக அஜித் செல்போனை பறித்ததாகவும் அதன்பின்னர் அந்த ரசிகருக்கு அறிவுரை வழங்கி செல்போனை திருப்பிக் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.