தயாநிதி அழகிரி அவர்களை திடீரென அஜித் சந்தித்ததற்கான காரணம் என்ன என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

தயாநிதி அழகிரியுடன் திடீர் சந்திப்பு ஏன்?? அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் - தீயாக பரவும் காரணம்

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இப்படியான நிலையில் அஜித் 61 படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற இருக்கும் அஜித் திடீரென தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் மங்காத்தா படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி அவர்களை சந்தித்துள்ளார்.

அஜித் மற்றும் அவருடைய குடும்பத்துடனான சந்திப்பு புகைப்படத்தை வெளியிட்டு அஜித்தை பற்றி பதிவு செய்திருந்தார் தயாநிதி அழகிரி. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த சந்திப்பு ஏன் என பேசத் தொடங்கியுள்ளனர். அஜித் நடிப்பில் மங்காத்தா-2 திரைப்படத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு இது என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தயாநிதி அழகிரியுடன் திடீர் சந்திப்பு ஏன்?? அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் - தீயாக பரவும் காரணம்

ஒருவேளை இது மங்காத்தா 2 படத்திற்கான சந்திப்பாக இருந்தால் சூப்பராக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர். அதற்கேற்றாற்போல இயக்குனர் வெங்கட் பிரபுவும் அஜித்தை சந்தித்து மங்காத்தா 2 படத்தின் கதையைக் கூறி விட்டதாகவும் அவர் தலை அசைத்தால் போதும் அடுத்த நிமிடமே படத்தை இயக்க தயார் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.