பீஸ்ட் படத்தை விட வலிமை தான் அதிக அளவில் வசூல் என உண்மையை உடைத்துள்ளார் விநியோகஸ்தர் ஸ்ரீதரன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களது நடிப்பில் அடுத்ததாக பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளன.

பீஸ்ட் வசூல் கம்மி, வலிமை தான் அதிக வசூல் - ஓப்பனாக உண்மைகளை உடைத்த வினியோகிஸ்தர்.!!

இந்த இரண்டு படங்களை ஜெயிக்கப் போவது எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில் தற்போது பிரபல விநியோகிஸ்தர்களில் ஒருவரான ஸ்ரீதரன் அளித்த பேட்டி ஒன்றில் பீஸ்ட் மற்றும் வலிமை படம் பற்றி பேசியுள்ளார்.

பீஸ்ட் வசூல் கம்மி, வலிமை தான் அதிக வசூல் - ஓப்பனாக உண்மைகளை உடைத்த வினியோகிஸ்தர்.!!

அதாவது வலிமை படம் வியாபாரம் அதிக தொகைக்கு விற்பனையானது. பீஸ்ட் படத்தை காட்டிலும் வலிமை படம் தான் அதிக அளவில் வசூல் செய்தது. அதுதான் உண்மை என தெரிவித்துள்ளார். ஸ்ரீதரன் அடித்த இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.