அண்ணாத்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் என சொன்னதெல்லாம் பொய் எனவும் அண்ணாத்த படத்தில் நஷ்டம் பற்றி தெரியவந்துள்ளது.

Real Collection of Annathae : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் இந்த படம் வெளியானது.

அண்ணாத்த பிளாக்பஸ்டர்னு சொன்னதெல்லாம் பொய்யா?? இத்தனை கோடி நஷ்டம் தானா? - ஷாக்கிங் ரிப்போர்ட்

தீபாவளிக்கு வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், லிவிங்ஸ்டன் என பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்ததாக சொல்லப்பட்டு வந்தது.

படம் வெளியான வாரம் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருந்தாலும் அதன் பின்னர் படிப்படியாக கூட்டம் குறையத் தொடங்கிய நிலையில் கொட்டி தீர்த்த கன மழையால் பல திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதன் காரணமாக அண்ணாத்த திரைப்படம் வசூலில் பலத்த அடியை வாங்கியதாக சொல்லப்படுகிறது.

தாணுமாலய சாமி கோவில் : மார்கழி திருவிழாவுக்கு, பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி

அண்ணாத்த பிளாக்பஸ்டர்னு சொன்னதெல்லாம் பொய்யா?? இத்தனை கோடி நஷ்டம் தானா? - ஷாக்கிங் ரிப்போர்ட்

உண்மையில் இதுவரை இந்த படம் ரூபாய் 169 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்திற்காக ஆன மொத்த செலவு ரூபாய் 182 கோடி. இதனால் இந்தப் படம் பதினான்கரை கோடி நஷ்டம் அடைந்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறி வருகின்றனர். இதன் காரணமாகவே ரஜினி தன்னுடைய அடுத்த படத்தில் சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

Maanaadu படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்!

ஆனால் உண்மை என்னவோ?? படக்குழுவினர் சொன்னால் தான் தெரியும்.