
மீண்டும் வருகிறது ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சி.
தமிழ் சின்னத்திரையில் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை கவர்வது நம்பர் ஒன் ஆக இருந்து வருகிறது விஜய் டிவி.
இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இருந்து வருகிறது. அப்படியான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ரெடி ஸ்டெடி போ.
இந்த நிகழ்ச்சி தற்போது புத்தம் புதிய பரிமாணத்துடன் மீண்டும் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை புதிய தொகுப்பாளர்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.
ஆமாம் குக் வித் கோமாளி ரக்சன் மற்றும் பாக்கியலட்சுமி எழிலாக நடித்து வரும் விஜே விஷால் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர்.
இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.