rawa sweet corn cheese roll recipe
rawa sweet corn cheese roll recipe

தேவையான பொருட்கள் :

ஸ்வீட் கார்ன் – 2கப்,
ரவா – 2கப்,
துருவிய சீஸ்- 1 கப்
வெங்காயம் – 2
கொத்தமல்லி – சிறிதளவு,
கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
பால் – 4 கப்,
மைதா – 4 டீஸ்பூன் ,
ப்ரெட் க்ரம்ஸ் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

1) ரவையை வறுத்து அதில் பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும்.

2) பிறகு அதனுடன் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லி இலை ஆகிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

3) ஒரு பாத்திரத்தில் மைதா மாவில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

4) பிசைந்து வைத்துள்ள கார்ன் கலவையை எடுத்து ரோல் செய்து, அதனை மைதா மாவு கரைசலில் தோய்த்து எடுக்கவும். பிறகு ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.

5) வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் ரோல்ஸைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். 6) சுவையான ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here