மகாலட்சுமி செய்த டார்ச்சரால் கல்யாணத்துக்கு முன்னாடியே விவாகரத்து கொடுத்து இருப்பேன் என பேசி உள்ளார் ரவீந்திரன்.

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் மகாலட்சுமி. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் வில்லியாக நடித்து வருகிறார். இவர் தயாரிப்பாளர் ரவீந்திரனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

மகாலட்சுமி செய்த டார்ச்சர்.. இது தெரிஞ்சிருந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே விவாகரத்து கொடுத்து இருப்பேன் - ரவீந்திரன் ஓபன் டாக்.!!

இதனையடுத்து சமூக வலைதளங்கள் முழுக்க இவர்கள் திருமண பேச்சு தான் அடிபட்டு வருகின்றன. ரவீந்திரனும் தனது புது மனைவியான மகாலட்சுமியை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார். அதே போல் தன்னுடைய கணவரை உருவ கேலி செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார் மகாலட்சுமி.

இப்படியான நிலையில் நேரலை ஒன்றில் பேசிய ரவீந்திரன் புது மனைவி என்பதால் வெட்கப்படுகிறார். அதனால் தான் நேரலையில் மகாலட்சுமி வரவில்லை என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னை அன்பே வா சீரியலை பார்க்குமாறு டார்ச்சர் செய்கிறாள். இது தெரிந்திருந்தால் கல்யாணத்துக்கு முன்னாடியே டிவோர்ஸ் கொடுத்திருப்பேன் என காமெடியாக பேசியுள்ளார்.

மகாலட்சுமி செய்த டார்ச்சர்.. இது தெரிஞ்சிருந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே விவாகரத்து கொடுத்து இருப்பேன் - ரவீந்திரன் ஓபன் டாக்.!!

இதனைக் கேட்ட ரசிகர்கள் அது எப்படி கல்யாணத்துக்கு முன்னாடி விவாகரத்து கொடுக்க முடியும் என கிண்டல் அடித்து வருகின்றனர்.