Ravi Latest Update
முதல் முறை ஜோடி சேரும் ஜெயம் ரவி மற்றும் ஆடுகளம் நடிகை டாப்ஸி

Jayam Ravi Latest Update : தற்போது ஜெயம் ரவி நடித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கும் படம் “கோமாளி”.

குடும்பங்களுடன் சென்று பார்க்கும் அளவிற்கு படம் நல்ல விமர்சனத்தை பெற்று உள்ளது.பல கருத்துகளை ஒன்றாக சிரிப்புடன் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர். படத்தில் நடித்தவர்கள் நடிப்பும் அதற்கு துணையாக அமைந்து உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி அடுத்ததாக “மனிதன்” பட இயக்குனர் அகமது அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜெயம் ரவி.

தாதா 87 இயக்குனரின் அடுத்த அதிரடி படம் பப்ஜி.!

மேலும், இந்த படத்தின் கரு, ஒரு ” ஸ்பை, த்ரில்லர் ” கலந்த கதையாக அமைந்து இருக்கும் என்றும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

“கேம் ஓவர்” படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் படத்தில் நடித்த டாப்ஸி அடுத்ததாக இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும், மேலும் தொடர்ந்து மற்ற தமிழ் படங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வந்து உள்ளது.

இந்தி படத்தில் கவனம் செலுத்தி வந்த டாப்ஸி மற்ற மொழிகளில் படங்கள் நடிக்காமல் இருந்தார். டாப்ஸி நடிப்பில் வெளியான இந்தி படம் “மிஷன் மங்கள்”. இது வெளியாகி நல்ல விமர்சனம் மற்றும் வசூல் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.