காதலை மறுத்ததால் சம்யுக்தா வீண் பழி சுமத்துவதாக ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

யூட்யூபில் வெளியான நிறை மாத நிலவே என்ற வெப் சீரிஸில் இணைந்து நடித்தவர்கள் ரவி மற்றும் சம்யுக்தா. இதைத்தொடர்ந்து சீரியல்களில் நடித்த தொடங்கிய சம்யுக்தா சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த போது தன்னுடன் இணைந்து நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து ஒரு மீது ஒருவர் குற்றம் கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஆடியோவில் சம்யுக்தா தன்னுடன் நிச்சயம் ஆன பிறகும் ரவியுடன் தொடர்ந்து பேசி வந்ததாக தெரிவித்திருந்தார்.

இன்னொரு பக்கம் சம்யுக்தா ரவி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு ரவி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன், என்னுடைய அம்மா என்னை இப்படி வளர்க்கவில்லை. ஒருவர் என்னை காதலித்து அதை நான் நிராகரித்தால் தவறா? அதற்காக ஒருவரது வாழ்க்கையை கெடுக்க இப்படி பேசக்கூடாது என கூறியுள்ளார்.

ஆறு வருடம் உழைத்து தான் நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் கண்டன்டுக்காக ஒருவரது வாழ்க்கையை அழிக்காதீர்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

ரவி வெளியிட்டுள்ள அறிக்கையை அவரது தோழியும் நடிகையுமான வெண்பாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.