Raveena Name Missed in Ayogya title card : Vishal | Rashi Khanna | Kollywood | Sam CS | Anirudh | Tamil Cinema | latest Cinema News

Raveena Name Missed in Ayogya title card :

அயோக்யா படத்தில் டைட்டில் கார்டில் தன்னுடைய பெயர் இடம்பெறவில்லை என ரவீனா வருத்தம் தெரிவித்துள்ளார். இதை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்!

‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர் இப்படத்தில் நாயகி ராஷி கண்ணாவுக்கு டப்பிங் கொடுத்தவர் ரவீனா.

இவர்தான் கத்தி படத்தில் சமந்தாவுக்கு வாய்ஸ் கொடுத்திருந்தார். கத்தி படத்தில் இணை இயக்குநராக இருந்த வெங்கட் மோகன்தான் இப்படத்தின் இயக்குநர். அதுமட்டுமல்லாமல் இது ரவீனாவின் 75-வது படமாம்.

ஆனால் இப்படிப்பட்ட படத்தில் டைட்டில் கார்டில் தன்னுடைய பெயர் இடம்பெறவில்லை என ரவீனா வருத்தம் தெரிவித்துள்ளார். இதை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.