Rava Pongal :
Rava Pongal :

Rava Pongal :

உடனே தயாராக கூடிய உணவில் ஒன்று ரவை உப்புமா, ஆனால் அனைவரும் உப்புமா என்றால் தெறித்து ஓடுவார்கள், ஆனால், ரவையில் இது போன்று பொங்கல் செய்து உடன் தக்காளி சாம்பார் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

1. ரவை – 1 கப்

2. நெய் – தேவைக்கு

3. இஞ்சி – சிறிதளவு

4. மிளகு – 1 ஸ்பூன்

5. சீரகம் – 1 ஸ்பூன்

6. கறிவேப்பிலை – சிறிதளவு

7. உப்பு – தேவைக்கு

8. முந்திரி – 10

செய்முறை :

முதலில் ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு அதில் சுத்தம் செய்து உள்ள ரவையை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.

பிறகு, அந்த கடாயில் மீண்டும் நெய் ய்ற்றி அதில் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் இதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் அதில் ஒரு பங்கு ரவைக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதித்த உடன் அதில் வறுத்த ரவையை பெருமையாக சிறிது சிறிதாக சேர்த்து கை விடாமல் கிளற வேண்டும். ரவையை சேர்த்தவுடன் அடுப்பை குறைத்து விட வேண்டும். இல்லை என்றால் அடி பிடித்து விடும்.

கொஞ்சம் நெய் சேர்த்து கிளறி கொடுத்து பின் அதில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ரவை பொங்கல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here