Rava Masala Urundai recipe 
Rava Masala Urundai recipe 

Rava Masala Urundai recipe :

தேவையான பொருட்கள் :

1. ரவை – 1½ கப்

2. தண்ணீர் – 3 கப்

3. எலும்பிச்சை – 1

4. தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்

5. இஞ்சி துருவல் – 2 ஸ்பூன்

6. கறிவேப்பிலை – சிறிது

7. மிளகு தூள் – 1 ஸ்பூன்

8. மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

9. சாம்பார் தூள் – 1 ஸ்பூன்

10. கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் சீரகம் – 1 ஸ்பூன்

11. உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

ஒரு கடாயில் 3 கப் தண்ணீர் விட்டு தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதி வந்ததும் அதில் இஞ்சி துருவல் மற்றும் மிளகு தூள் போட்டு கலந்துவிட வேண்டும்.

பிறகு அடுப்பை குறைத்துவிட்டு அதில் ரவையை கைவிடமால் கிளறிவிட வேண்டும். 2-3 நிமிடம் கழித்து ரவை வெந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு மூடிவிட வேண்டும்.

10-15 நிமிடம் கழித்து சூடு தணிந்ததும், அதனை சிறு சிறு உருண்டையாக உறிட்டி வைத்து இட்லி பாத்திரதில் வைத்து 5 நிமிடம் வெக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அடுப்பை நிறுத்திவிட்டு மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, மிளகாய் தூள் மற்றும் சாம்பார் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இத்துடன் அரை எலும்பிச்சை பிழிந்து விட்டு கலந்துவிட்டு பின் அதில் ரவை உருண்டையை சேர்த்து நன்றாக மசாலா கலக்கும் வரை கிளறி விட வேண்டும்.

பிறகு அடுப்பை ஆன் செய்து ரவை உருண்டை சூடானதும் அடுப்பை நிறுத்திவிட்டு பரிமாறினால் சுவையான ரவை மசாலா உருண்டை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here