Rava Idly 
Rava Idly 

Rava Idly :

இட்லியா அப்டின சாப்பாடு வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகளுக்கு இட்லியை இப்படி செய்து கொடுத்து பாருங்கள் என்ன நடிக்கிறது என்று. மற்றும் இது போன்ற இட்லி வைக்கு எல்லா விதமாலா சட்டினிகளும் பொருத்தமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

ரவை – 1 கப்
புளித்த தயிர் – 1 கப்
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை, இஞ்சி – சிறிதளவு
கடுகு – ½ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காய தூள் – சிறிதளவு
நெய் – 2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை :

கடாயில் எண்ணெய் விட்டு அது சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு போட்டு சிறிது வறுத்ததும் அதில் 1 கப் ரவை சேர்த்து வறுக்க வேண்டும். ரவை சீக்கிரமாக வறுப்பட்டுவிடும் எனவே அதனை இறுதியில் சேர்த்து வறுக்க வேண்டும்.

ரவை மற்றும் மற்ற பருப்பு வகைகள் வறுக்கும் போது அதனுடன் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சிறுத்து கறிவேப்பில்லை சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பிறகு அதனுடன் புளித்த தயிரை சேர்க்க வேண்டும். இதனை இட்லி மாவுடன் சேர்த்து நன்றக கலக்கி விட்டு 10 நிமிடம் அப்படியே விட வேண்டும்.

10 நிமிடம் கழித்து இட்லி தட்டில் நெய் தடவி தயாரித்து வைத்துள்ள மாவில் இட்லி ஊற்றி வேக வைத்து எடுத்து பரிமாறினால் ருசியான ரவை இட்லி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here