Ratsasan 2 Movie Villain Update
Ratsasan 2 Movie Villain Update

ராட்சசன் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ratsasan 2 Movie Villain Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசன்.

சைக்கோ த்ரில்லர் படமான இப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. இப்படத்தில் முகம் தெரியாத வில்லனாக சரவணன் என்பவர் நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றி விழாவில் தான் வில்லன் யார் என்பதையே இயக்குனர் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.

அடுத்ததடுத்து பாலிவுட்டில் ரீமேக்காகும் அஜித்தின் 2 படங்கள் – பட்டய கிளப்பும் தகவல்.!

இந்த நிலையில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் என இரண்டு படங்களையும் இணைத்து மீம்ஸ் ஒன்றை உருவாக்கி அதனை விஷ்ணு விஷாலுக்கு ரசிகர் ஒருவர் செய்கின்றார்.

இதனைப் பார்த்த விஷ்ணு விஷால் மூன்றாவது முறை இணையலாமா பதில் அளித்திருந்தார். இதன் காரணமாக ராட்சசன் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் ராட்சசன் 2 படத்தில் வில்லனாக அர்ஜுன் தாஸ், டேனியல் பாலாஜி ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்காக இவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.