ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து காத்துக் கொண்டிருப்பதாக ரத்னகுமார் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு லோகேஷுடன் இணைந்து திரைக்கதை அமைத்து வருகிறார் ஆடை இயக்குனர் ரத்னகுமார். இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் போட்டோ ஒன்றை பதிவிட்டு பொங்கல் பரிசு காத்துக் கொண்டிருக்கிறது, ட்விட்டருக்கு வரவும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த சாந்தனு இது என்ன சர்ப்ரைஸ் என ஒன்று தெரியாதது போல ஒரு ட்வீட் செய்துள்ளார். இது மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பற்றிய அறிவிப்பாக இருக்கும்.
இன்று மாலை இந்த அறிவிப்பு வெளியாகும் இதை தான் ரத்னகுமார் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Idhu Enna suspense ? ???? https://t.co/JaoK6Co6UI
— Shanthnu ???? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) January 14, 2020