Rathna kumar Interview About Master
Rathna kumar Interview About Master

மாஸ்டர் படம் பற்றி ஒரு சூப்பரான அப்டேட்டை கொடுத்துள்ளார் பிரபலம் ஒருவர்.

Rathna kumar Interview About Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வரும் திரைப்படம் மாஸ்டர்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் இவற்றில் பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆண்ட்ரியா வில்லி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தொகுப்பாளினி ரம்யா, ஆஹா கல்யாணம், பிகில் வர்ஷா பொல்லம்மா ஆகியோரும் விஜயுடன் இணைந்து நடித்துள்ளனர்.

நானும் வெறித்தனமான வெயிட்டிங் மாஸ்டர் டிரைலர் குறித்து பேசிய பிரபல நடிகர் – யார்?? என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

அனிருத் இசையமைக்க ஆடை மேயாத மான் ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் லோகேஷ் உடன் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார்.

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யை ஆப் ஸ்கிரீனில் எப்படி இருக்கிறாரோ அப்படியே பார்க்கலாம் என கூறியுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விஜய்யின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவில் சாதனை படைக்கும் படமாக மாஸ்டர் இருக்கும் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.